எழுத்தாளர் அ. மாதவையா, திருநெல்வேலி அருகே உள்ள பெருங்குளம் என்ற கிராமத்தில் பிறந்தவர்.
1898 ஆம் ஆண்டு பத்மாவதி சரித்திரம் என்ற நாவலின் முதற்பகுதியும், 1899 ஆம் ஆண்டில் இரண்டாம் பகுதியும் மாதவையாவால் எழுதப்பட்டது. 1925 ஆம் ஆண்டில் பஞ்சாம்ருதம் என்ற பத்திரிகை ஒன்றைத் தொடங்கினார். பத்மாவதி சரித்திரத்தின் மூன்றாம் பகுதியினை 1924 ஆம் ஆண்டு எழுதத் தொடங்கி, முழுமையடையாத தருணத்தில் மாதவையா மரணமடைந்தார்.1914 ஆம் ஆண்டில் இந்திய கும்மி என்ற கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார் மாதவையா. இப்போட்டியில் சுப்பிரமணிய பாரதியாரும் பங்கு கொண்டார்.1892 ஆம் ஆண்டில் சாவித்திரியின் கதை (அல்லது சாவித்திரியின் சரித்திரம்) என்ற நாவலை எழுதினார். தமிழில் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் (1879) என்ற நாவலுக்குப் பின்பு வந்த இரண்டாம் தமிழ் நாவல் சாவித்திரியின் கதை.